தூத்துக்குடி மணத்தியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் டெல்லியில் மாயம்
தூத்துக்குடி மணத்தியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் டெல்லியில் திடீரென மாயமானார்.
நெல்லை,
தூத்துக்குடி மணத்தியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் டெல்லியில் திடீரென மாயமானார். அவரை மீட்டு தரக்கோரி நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
தூத்துக்குடி மாவட்டம் மணத்தியை சேர்ந்த நடராஜன் மகன் அண்ணாதுரை (வயது 36). இவர் மத்திய பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சண்டிகாரில் பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி அண்ணாதுரை கடந்த மே மாதம் தூத்துக்குடிக்கு வந்தார்.
டெல்லியில் மாயம்
மேலும் நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மனைவி வீட்டுக்கும் வந்தார். விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி நெல்லை வழியாக செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெல்லிக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் மாயாமானார். அவரது கதி என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் அவர் இருப்பதாக, அண்ணாதுரை குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் வந்துள்ளது.
குடும்பத்தினர் கோரிக்கை
இதையடுத்து அண்ணாதுரை குடும்பத்தினர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கிடைத்த விவரங்களை தெரிவித்தனர். அந்த தகவலை கொண்டு விரைவில் அண்ணாதுரையை மீட்க வேண்டும் என்று அவர்கள் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story