உங்களுக்கு தெரியுமா?
கார்களுக்கும், மோட்டார் வாகனங்களுக்கும் ஆடம்பர எண் (பேன்சி நம்பர்) வாங்குவதற்கு இந்தியாவில் போட்டா போட்டி நடப்பது உண்டு. அதற்காக அவர்கள் சில லட்சங்களை செலவிடவும் தயங்க மாட்டார்கள்.
உலகிலேயே ஒரு எண்ணுக்கு மிக அதிகமாக கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? அந்த எண் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
உலக கார் பந்தய போட்டியில் F1 (பார்முலா ஒன்) ரேசிங் என்பது உலகளவில் புகழ் பெற்றது. அந்த F1 என்ற எண்ணிற்கு தான் மிக அதிகமான தொகை கொடுக்கப்படுகிறது.
அந்த தொகை எவ்வளவு தெரியுமா? மயங்கி விடாதீர்கள். அந்த தொகை 132 கோடி ரூபாய். தொடக்கத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான இந்த எண்ணின் தற்போதைய மதிப்பு ரூ.132 கோடி என்று இங்கிலாந்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு துபாயில் DS என்ற எண்ணிற்கு ரூ. 67 கோடியும் ஒற்றை இலக்க எண்ணான “1” என்ற எண்ணிற்கு அபுதாபியில் ரூ. 66 கோடியும் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story