கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 டெம்போக்களின் கண்ணாடி உடைப்பு
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 டெம்போக்களின் கண்ணாடியை பொதுமக்கள் கற்களை வீசி உடைத்தனர்.
அஞ்சுகிராமம்,
கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்து, குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், எல்லை பகுதி மக்களும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை சிறைபிடித்து போலீசாரின் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை அஞ்சுகிராமம் அருகே கேரள பதிவு எண் கொண்ட 2 டெம்போக்கள் சென்றது. அப்போது, டெம்போவில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன், பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் மீது கழிவு நீர் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், 2 டெம்போக்களையும் குமரி–நெல்லை எல்லை பகுதி சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினார். துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசியதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதனால் டெம்போ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், டெம்போக்கள் மீது கற்களை வீசி அதன் கண்ணாடிகளை உடைத்ததுடன், டிரைவர்களையும் சிறைபிடித்தனர்.
உடனே இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து 2 டிரைவர்களையும் மீட்டு போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளாவில் இருந்து டெம்போக்களில் கோழிக்கழிவுகளை நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 2 டெம்போக்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story