வெள்ளம் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் - எடியூரப்பா


வெள்ளம் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் - எடியூரப்பா
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளம் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை பா.ஜனதா தலைவர் அமித்ஷாவிடம் இருந்து பெற்றார். அதை பெற்றுக்கொண்டு அவர் கர்நாடகம் திரும்பினார். முன்னதாக எடியூரப்பா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது விளக்கி கூறினேன். உடனடியாக நிவாரண நிதி வழங்குமாறும் வலியுறுத்தினேன். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். மடிகேரி, தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதனால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிதி உதவியை வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறேன். இன்றைய தினம்(நேற்று) பிரதமரை சந்திக்க முடியவில்லை. இன்னொரு நாள் மோடியை சந்தித்து பேசுவேன். முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story