கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு


கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 10:45 PM GMT (Updated: 22 Aug 2018 9:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி அனைத்து பள்ளி வாசல்களிலும் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கிருஷ்ணகிரி ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதானம், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பழையபேட்டை ஈத்கா மைதானம் மற்றும் சேலம் சாலையில் உள்ள நமாஸ் பாறை ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.

இதையொட்டி ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியினை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.

இதே போல் மகராஜகடை மஸ்ஜிதே சாகுல் ஹமீத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலரும், பள்ளி வாசல் ஜமாத் கமிட்டி தலைவருமான வஜீர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஜமாத் தலைவர் அன்வர்பாஷா, அமீர்ஜான், மாலிக், யூனூஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது. இதே போல் காவேரிப்பட்டணம், மோரனஹள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். 

Next Story