உடன்குடியில் சூறைக்காற்றில் மரம், மின்கம்பம் முறிந்து காரில் விழுந்தது


உடன்குடியில் சூறைக்காற்றில் மரம், மின்கம்பம் முறிந்து காரில் விழுந்தது
x
தினத்தந்தி 24 Aug 2018 3:00 AM IST (Updated: 23 Aug 2018 4:41 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் சூறைக்காற்றில் மரம், மின்கம்பம் முறிந்து காரில் விழுந்தது.

உடன்குடி, 

உடன்குடியில் சூறைக்காற்றில் மரம், மின்கம்பம் முறிந்து காரில் விழுந்தது.

சூறைக்காற்று

உடன்குடியில் நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென்று சூறைக்காற்று வீசியது. அப்போது உடன்குடி பெருமாள்புரம் நுழைவுவாயில் அருகில் உள்ள பழமைவாய்ந்த அத்தி மரத்தின் கிளை முறிந்து, அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது.

இதில் அந்த மின்கம்பம் இரண்டாக முறிந்து, மரத்தின் அடியில் நின்ற காரின் மீது மரக்கிளையுடன் விழுந்தது. இதனால் அங்கு நின்றவர்கள் அலறியடித்தவாறு ஓடினர். அதிர்ஷ்டவசமாக மரத்தின் அடியிலும், காரிலும் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மின்தடை

இதுகுறித்து உடன்குடி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்வாரிய ஊழியர்கள் பெருமாள்புரத்துக்கு செல்லும் மின்இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் முறிந்து விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தி விட்டு, சேதம் அடைந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.


Next Story