அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் மாயம்; திருமணம் நின்றது மணமகன் வீட்டார் அதிர்ச்சி
அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் மாயமானதால் நேற்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதனால், மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே மைலாடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் என்ஜினீயருக்கும், தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
அப்போது, ஆகஸ்டு 23–ந் தேதி (நேற்று) திருமணம் நடத்தலாம் என நாள் குறிக்கப்பட்டது. அதன்பின்பு, இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினர். அழைப்பிதழ்கள் அடித்து உறவினர்களுக்கு வழங்கினர்.
இந்தநிலையில், கடந்த 21–ந் தேதி இரவு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென மாயமானார். திருமணம் நெருங்கி வரும் நிலையில் மணப்பெண் மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியும் திருமணத்துக்கு முன்பு அவரை தேடி பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் தேடினர்.
அத்துடன் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் மாயமான மணப்பெண் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மேற்படிப்பு படிக்க விரும்பியதாகவும், எனவே, திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து மாயமானதாகவும் தெரிய வந்தது. ஆனால், அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், நேற்று காலையில் திருமணத்துக்காக உறவினர்கள் வரத்தொடங்கினர். அப்போது, மணப்பெண் மாயமான தகவல் கசிய தொடங்கியது. அத்துடன், மணமகன் வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த அவர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய திருமண வீடு சோகமயமானது. அத்துடன் நேற்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. திருமண விருந்துக்காக தயார் செய்யப்பட்ட உணவு பொருட்கள் அனைத்தும் வீணானது.
இதற்கிடையே திருமணம் நின்ற தகவல் தெரியாமல் சில உறவினர்கள் இரு வீட்டிலும் வரத்தொடங்கினர். அவர்கள் தகவல் அறிந்ததும் திரும்ப சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story