ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, பி.வி.பட்டினம், வேலாவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நிர்வாக திறமையில்லாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் கவலை இல்லை. ஒவ்வொரு நாளும் ஆட்சியை எப்படி நகர்த்தி கொண்டு போவது என்ற சிந்தனை தான் மேலோங்கியுள்ளது.
அ.தி.மு.க. அரசுக்கு நீர் மேலாண்மை பற்றிய தெளிவு இல்லை. இன்று தமிழகத்தில் ஒரு பக்கம் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மற்றொரு பக்கம் மக்கள் தண்ணீருக்காக தவித்து கொண்டு இருக்கின்றனர். காவரி ஆற்றில் தற்போது முறை வைக்க வேண்டிய நிலை இல்லை. ஏனெனில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. ஆனால் அனைத்தும் கடலுக்கு தான் செல்கிறது. கடைமடைக்கு தண்ணீர் வந்து விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடைமடைக்கு முன்பே தண்ணீர் வந்து சேரவில்லை என்பது தான் உண்மை.
தமிழகத்தில் உள்ள கண்மாய் வரத்து கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு விட்டதாக கூறுகின்றனர். ஆனால் எங்கும் அதுபோன்ற பணிகள் நடந்ததாக தெரியவில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் நடத்த மறுத்து வருகிறார்கள். மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. இதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தான் எடுத்துக்காட்டு. தமிழகம் முழுவதும் மக்கள் நலனுக்காக போராடுபவர்களை வழக்குகளை போட்டு முடக்குகிறது.
தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை இதுநாள் வரை பல விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
இதனையும் உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவருடன் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் வெளியங்குடி முருகானந்தம், தொண்டி பாலசுப்பிரமணியன், கோடனூர் கணேசன், தொண்டி நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் காளிதாஸ், முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், பொது செயலாளர் பெருவக்கோட்டை சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story