பொன்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


பொன்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 24 Aug 2018 4:00 AM IST (Updated: 24 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பொன்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பனைக்குளம்,

பொன்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து யாத்ரா தானம் தொடங்கியது.

அதன்பின்னர் காலை 10 மணிக்கு பொன்குளம் கிராம பொதுமக்கள் முன்னிலையில் ரெகுநாதபுரம் தெய்வச்சிலை அய்யங்கார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, தேவிபட்டினம் காவல்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ஊரைச்சேர்ந்த பாலசுப்பிரமணியன்-தெய்வானை அம்மாள் ஆகியோரது மகன்களுக்கும், ராமநாதபுரம் வாசுதேவன் பாத்திரக்கடையின் உரிமையாளர்கள் ஜோதிமணி, சிங்காரவேலு குடும்பத்தினர்களுக்கும் கிராம மக்கள் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொன்குளம் முன்னாள் தலைவர் நாகநாதன், பொறியாளர் செல்வம், ஜீவிஆரவ், வினோத்கண்ணன், ஜி.என்.ஆரவ், ராம்கி தாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொன்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story