ஊழியர்கள் பற்றாக்குறையால் கண்காணிப்பு பணியில் சிக்கல்
கம்பம் வனத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கண்காணிப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கம்பம்,
கம்பம் மேற்கு வனச்சரகம் இயற்கை வனப்பகுதியாகவும், கிழக்கு வனச்சரகம் மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளது. இங்கு தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரிய வகை மரங்களும், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, மரஅணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.
இந்நிலையில் கம்பம் வனத்துறையில் போதிய ஊழியர் கள் இல்லை. இதனால் வனவிலங்குகள் வேட்டை, மரம் வெட்டி கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் சிக்கலாக உள்ளதாக ஊழியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு வனச்சரகத்திற்கும் உட்பட்ட பகுதியில் வனச்சரகர் தலைமையில் வனக்காவலர், வனக்காப்பாளர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை வைத்து வனப்பகுதியில் தினமும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து மரம் வெட்டுதல், வனவிலங்குகள் வேட்டையாடுவது உள்ளிட்டவை கண்காணிக் கப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதிகளுக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வின் காரணமாக வன ஊழியர்கள் ஓய்வுபெற்றதால் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக வனக்காப்பாளர், வனக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஊழியர்கள் பற்றாக் குறையால் கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் சிக்கலாக உள்ளது. எனவே வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story