அம்பர்நாத்தில் ‘வடபாவ்’ உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு
அம்பர்நாத்தில் உள்ள கடையில் ‘வடபாவ்’ உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் அம்பர்நாத் கிழக்கு சிவாஜிசவுக் பகுதியில் மிகவும் பிரபலமான ‘வடபாவ்’ கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை தனியார் நிறுவன ஊழியர் கோகில் என்பவர் ‘வடபாவ்’ வாங்க வந்தார்.
பின்னர் கடைக்காரர் கொடுத்த ‘வடபாவ்’ உணவை வாங்கி சாப்பிட முயன்றபோது அதன் உள்ளே பல்லி ஒன்று செத்து கிடந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் பல்லி இருந்த ‘வடபாவ்’ உணவை கடை உரிமையாளரிடம் காண்பித்து அவரிடம் சண்டையிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
‘வடபாவ்’ உணவில் பல்லி இருந்ததை அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
இந்த நிலையில், கடை உரிமையாளர் ‘வடபாவை’ திரும்ப பெற்று கொண்டு அதற்கான பணத்தை திருப்பி கொடுத்தார். ஆனால் இதுபற்றி கோகில் அம்பர்நாத் நகராட்சி மற்றும் சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி ேபாலீசார் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று விற்பனைக்கு வைத்து இருந்த ‘வடபாவ்’ உணவை பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story