காஞ்சீபுரத்தில் அரசு மதுபான கடையில் அனுமதி இன்றி செயல்பட்ட 10 பார்களுக்கு ‘சீல்’


காஞ்சீபுரத்தில் அரசு மதுபான கடையில் அனுமதி இன்றி செயல்பட்ட 10 பார்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 23 Aug 2018 11:33 PM GMT (Updated: 23 Aug 2018 11:33 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடைகளில் அனுமதி இன்றி மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகும் புகார்கள் வந்தது.

வாலாஜாபாத்,

இதையடுத்து சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முத்துக்குமாரசுவாமி தலைமையில் டாஸ்மாக் அதிகாரிகள் காஞ்சீபுரம் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெரிய காஞ்சீபுரம், செவிலிமேடு, சாலை தெரு, டோல்கேட், ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 மதுபான பார்களை கண்டுபிடித்து, அவற்றுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபான பார்கள் குறித்து சோதனை தொடரும் என சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முத்துக்குமாரசுவாமி தெரிவித்தார்.

Next Story