காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1¾ கோடி நிவாரண பொருட்கள்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ரூ.1 கோடியே 40 லட்சத்து 7 ஆயிரத்து 193 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம்,
இந்தநிலையில் பேரூராட்சிகளின் சார்பில் ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்து 208 மதிப்பிலும், நகராட்சிகள் சார்பில் ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், தன்னார்வலர்கள் சார்பில் ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 500 மதிப்பிலும், தனியார் பள்ளியின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலும் ஆகமொத்தம் ரூ.39 லட்சத்து 49 ஆயிரத்து 708 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கேரளாவின் பாலக்காடு நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தார்.
இதன்மூலம் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ரூ.1 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 901 மதிப்பில் அரிசி மூட்டைகள், தேங்காய் எண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகம்மது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அதிகாரி ராஜீ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story