வயல்வெளியில் வாலிபர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை
செய்யாறு அருகே வயல்வெளியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செய்யாறு தாலுகா விண்ணவாடி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். இவரது வயல்வெளி நிலத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் செய்யாறு டவுன் பெரிய கவரத் தெருவை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் விஜய் (வயது 25) என்பதும், கார் டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இறந்த விஜய் உடல் அருகில் மதுபாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில் ஒன்றும் இருந்தது, அந்த பாட்டிலில் உயிர்க்கொல்லி மருந்து வாடை வீசியதாக தெரிகிறது.
விஜய் சம்பவ இடத்திற்கு எதற்காக சென்றார்?, மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு பிணத்தை அங்கு வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story