போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் திருடிய மேலாளர் கைது


போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் திருடிய மேலாளர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2018 5:21 AM IST (Updated: 24 Aug 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் போலி பில் தயாரித்து ரூ.42 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் திருடிய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் எம்.ஆர்.எச். சாலை அருகே இரும்பு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை வினோத்குமார் (வயது 42) என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இரும்பு கம்பிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த முருகன் (30) என்பவர் மேலாளராக பணியில் சேர்க்கப்பட்டார். இவர் போலி பில் தயாரித்து இரும்பு கம்பிகளை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் இருப்பு குறித்து வினோத்குமார் ஆய்வு செய்தார். அப்போது சுமார் 20 டன் இரும்பு கம்பிகள் குறைவாக இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வினோத்குமார் சந்தேகத்தின் பேரில் முருகன் மீது மாதவரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முருகனிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், போலி பில் தயாரித்து இரும்பு கம்பிகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.42 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story