குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று மந்திரிசபை கூட்டம்
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மந்திரிசபை கூட்டம் நடைபெறுகிறது.
பெங்களூரு,
குடகு மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது.
குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். குடகில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (வெள்ளிக் கிழமை) மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் நடைபெறும் 6-வது மந்திரிசபை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் குடகில் வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்த முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக குடகில் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுப்பதா? இழப்பீடு வழங்குவதா? என்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் குடகு உள்பட கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெறுவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதவிர விவசாய கடன் தள்ளுபடி குறித்தும், மகதாயி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது தொடர்பாகவும் மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

Related Tags :
Next Story