நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சுதேசி-பாரதி மில் தொழிலாளர்கள் ஊர்வலம்
நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
பாரதி-சுதேசி மில் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்கவேண்டும். 2013 முதல் பணிஓய்வு பெற்ற 155 தொழிலாளர்களுக்கு தரவேண்டிய பணிக்கொடை உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மில் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தினார்கள். பாரதி மில் தொழிலாளர்கள் கடலூர் சாலையில் உள்ள பாரதி மில் அருகே இருந்து வந்து சுதேசி மில் தொழிலாளர்களுடன் வெங்கடசுப்பாரெட்டியார் சிலையருகே இணைந்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகே வந்தது. அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் சட்டசபையில் அமைச்சர் ஷாஜகானை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Related Tags :
Next Story