வீடற்ற பேஷன் மாடல்
நியூயார்க்கை சேர்ந்த மார்க் ரே, பேஷன் போட்டோகிராபர். 6 ஆண்டுகள் பேஷன் உலகில் மாடலாகவும் இருந்தவர். ஆனால் இன்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, அவருக்கு சொந்த வீடு இல்லை.
நியூயார்க்கில் இருக்கும் வீடற்ற ஆயிரக்கணக்கான மனிதர்களில் மார்க்கும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பிறகு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வேலை செய்தார் மார்க். பிறகு 4 ஆண்டுகள் மாடலாகவும் வலம் வந்தார். ஆனாலும் வருமானம் ஒன்றும் பெரிதாக இல்லை. மீண்டும் நியூயார்க் திரும்பினார். பின்னர் பேஷன் போட்டோகிராபியில் கவனம் செலுத்தினார்.
“பேஷன் துறையில் இருந்ததால் இந்த வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். அதிலும் தோல்வியையே சந்தித்தேன். சேமிப்பும் கரைந்துவிட்டது. அதனால் உணவகத்தில் வேலை செய்து வந்தேன். தங்குவதற்கு இடம் இல்லை. கிடைத்த இடங்களில் தூங்குவேன். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, ஒரு ஜிம்மில் சேர்ந்துகொண்டேன். அங்கே குளிக்க, துவைக்க, துணியை இஸ்திரி போட என்று பல வசதிகள் உண்டு. மீண்டும் மாடலிங் துறையில் மிகச்சிறிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் நியூயார்க்கில் ஒரு மனிதன் வாழ்க்கை நடத்துவதற்கு இது போதுமானதாக இருக்காது. என் வாழ்க்கையில் நான் எப்போதுமே என் கஷ்டத்தை நினைத்து கவலைப்பட்டதில்லை. மாடலாக, நடிகராக, போட்டோகிராபராக நல்ல வேலைகளில்தான் இருந்திருக்கிறேன். ஆனாலும் என் பொருளாதார நிலைமை சீரடையவில்லை’’ என்கிறார் மார்க். வீடற்ற மாடல் என்ற பெயரில் மார்க்கை வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story