மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: அண்ணன் சாவு; தம்பி படுகாயம்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: அண்ணன் சாவு; தம்பி படுகாயம்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:05 PM IST (Updated: 24 Aug 2018 4:05 PM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் பரிதாபமாக பலியானார். மேலும் தம்பி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பணகுடி, 

பணகுடியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் பரிதாபமாக பலியானார். மேலும் தம்பி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மினி லாரி டிரைவர்

பணகுடி நெருஞ்சிக்காலனியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன்கள் ராஜேஷ்(வயது44), பிரபு(34). இருவரும் மினி லாரி டிரைவர்களாக இருந்து வருகின்றனர்.

நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். பணகுடி நெருஞ்சிக்காலனி அருகே நான்கு வழிச்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். பலத்த காயங்களுடன் பிரபு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story