பாசனத்துக்காக மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறப்பு


பாசனத்துக்காக மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 3:15 AM IST (Updated: 25 Aug 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்துக்காக மாம்பழத்துறையாறு அணையில் இருந்து நேற்று 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நாகர்கோவில், 


குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு மட்டும் 2,099 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 2,186 கன அடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வினாடிக்கு 597 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அணையில் இருந்து பாசனத்துக்காக 806 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பொய்கை அணைக்கு 4 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து நேற்று முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

Next Story