கல்லணையின் உறுதித்தன்மை குறித்து முதல்அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

முக்கொம்பு பழமையானதால் தான் உடைந்தது என்றால் அதனை விட பழமையான கல்லணையின் உறுதி தன்மை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
சுந்தரக்கோட்டை,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணை உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்பது தவறானது. பழமையானதால்தான் அது உடைந்தது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சரின் இந்த கருத்து மணல் கொள்ளைக்கு துணை போவது ஆகும்.
முக்கொம்பு மேலணையை விட மிகவும் பழமையான கல்லணையின் உறுதி தன்மை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். இடிந்த கதவணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதை வரவேற்கிறேன்.
இடிந்த கதவணையை மணல் மூட்டையால் அடைக்க முயற்சிப்பது தவறானது. மீண்டும் பெருவெள்ளம் வந்தால் கல்லணைக்கு பேராபத்து ஏற்படும். தண்ணீர் பகிர்ந்தளிப்பதிலும் பின்னடைவு ஏற்படும். எனவே ராணுவத்தினர் மூலம் இரும்பு தூண்கள் அமைத்து தற்காலிக ஷட்டர்கள் அமைப்பது தான் பாதுகாப்பானதாகும்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கியதால் தான் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது. இதனால் அண்டை மாநில உறவுகள் சீர்குலையும். 152 அடி உயர்த்த அனுமதி அளித்திருந்தால் பெருவெள்ளம் குறைக்கப்பட்டிக்கும் என்பதை கேரளம் உணர வேண்டும்.
காவிரி டெல்டாவில் விளை நிலங்களுக்கு பாசன நீர் சென்றடையாததை கண்டித் து டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கு தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை(அதாவது இன்று) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story