காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
ஒட்டன்சத்திரம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மருனூத்துப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாட்டை சேர்ந்த வினிதா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணத்துக்கு முதலில் இருவரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதுதொடர்பாக அர்ஜூனனுக்கும், வனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே வனிதா, மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அர்ஜூனன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த வனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வனிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய தந்தை, ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜிம் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story