விளை நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்


விளை நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே விளைநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர், 


திருக்கோவிலூர் அருகே உள்ள மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவமாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேலப்பழங்கூருக்கு விரைந்து வந்து, விளை நிலத்தில் சோதனை நடத்தியதில், நிலத்தில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 பிளாஸ்டிக் கேன்களில் 630 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேஊரை சேர்ந்த சூசைராஜ், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் எரிசாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை பதுக்கி வைத்ததாக சூசைராஜ்(வயது 39), மணிகண்டன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். 

Next Story