நெருல்-கார்கோபர் புதிய பாதையில் அக்டோபர் மாதம் ரெயில் சேவை தொடங்கும்


நெருல்-கார்கோபர் புதிய பாதையில் அக்டோபர் மாதம் ரெயில் சேவை தொடங்கும்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:36 AM IST (Updated: 25 Aug 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

நெருல்-கார்கோபர் புதிய பாதையில் அக்டோபர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் என மத்திய ரெயில்வே அதிகாரி கூறினார்.

மும்பை,

நெருல்-உரன் இடையே ரூ.1,782 கோடி செலவில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நெருலில் இருந்து சீவுட்ஸ், பேலாப்பூர், சாகர் சங்கம், தார்கர், பாமன் டோங்கிரி, கார்கோபர், கவன், ராஜன்பான்டா, நவசேவா, ட்ரோனகிரி வழியாக உரனுக்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக நெருல்-கார்கோபர், 2-ம் கட்டமாக கவன்-உரன் இடையே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மத்திய ரெயில்வே, சிட்கோ இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இதில் முதல் கட்ட பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. 2-ம் கட்ட பணிகளை 2021-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், சிட்கோ அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சீவுட்ஸ், பாமன் டோங்கிரி, கார்கோபர் ரெயில் நிலைய பகுதிகளை சிட்கோ, மத்திய ரெயில்வேயிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து அக்டோபர் மாதம் முதல் கட்டமாக புதிய ரெயில் பாதையில் நெருல்-கார்கோபர் இடையே ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ரெயில் நிலையங்களை சிட்கோ எங்களிடம் ஒப்படைத்துவிட்டதால் வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் நெருல்-கார்கோபர் இடையே ரெயில் சேவையை எங்களால் தொடங்க முடியும்’’ என்றார். 

Next Story