சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வாக்குவாதம்


சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Aug 2018 5:59 AM IST (Updated: 25 Aug 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை வளாகத்திற்குள் 2 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாற்று திறனாளிகள் மட்டும் 2 சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நேற்று தனது கட்சிக்காரருடன் மோட்டர் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். பிரதான நுழைவாயிலில் வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சட்டசபை காவலர்கள் அவர்களை மடக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் சலீம், எதற்காக உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சபைக்காவலர்கள் சட்டசபைக்குள் 2 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்து சட்டசபை மார்ஷல் ரமேஷ் அங்கு விரைந்து வந்தார். அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சலீமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அவர் வந்த வாகனம் சட்டசபைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது. சட்டசபை வளாகத்துக்குள் இருசக்கர வாகனத்தை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் சபைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story