வெள்ளத்தில் மிதந்த தேவாலயத்தில் திருமணம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையால் வெள்ளத்தில் மிதந்த தேவாலயத்தில் நடந்த திருமணம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ‘யாகி’ புயல் கடும் சேதத்தையும், பெரும் மழையையும் கொண்டு வந்தது. இதில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின, பல கட்டிடங்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் புலாகான் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தேவாலயம் ஒன்றில் திருமணம் நடந்தது.
இப்பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் ஜோபல் டேலோல் ஏஞ்சல்ஸும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அத்தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
‘பெரு வெள்ளமோ, பெரு மழையோ, வாழ்க்கையில் ஒரு முறைதான் திருமணம் செய்து கொள்வோம். அதை ஏன் நாம் தள்ளிப்போடவேண்டும்?’ எனக் கேட்கிறார், மணமகள் ஜோபல்.
தேவாலயம் தண்ணீரில் மூழ்கியிருந்ததால் எங்களின் திருமண உடைகள் நனைந்தன. ஆனால் அது பெரிதாகத் தெரியவில்லை என அவர் கூறினார்.
தேவாலயத்துக்கு அழைத்துச் செல்ல எந்த வாகனமும் முன்வராத நிலையில் அங்கு மணப்பெண் ஒரு படகில்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story