சங்கரன்கோவில் அருகே கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


சங்கரன்கோவில் அருகே கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 25 Aug 2018 6:49 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்துவமனை புதிய கட்டடத்தினை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

நெல்லை, 

சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்துவமனை புதிய கட்டடத்தினை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

கால்நடை மருந்துவமனை 

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் கால்நடை மருந்துவமனை புதிய கட்டடத்திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கால்நடை உற்பத்திய பெருக்கிடும் விதத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச கறவை பசுக்களை வழங்கி அவைகளை தொடர்ந்து பராமரிக்க கால்நடை மருந்துகளையும் கூடுதலாக வழங்கி வருகிறது. திருவேங்கடம், வெள்ளாங்குளம், குறிஞ்சாகுளம், மைபாறை, குளகட்டாகுறிச்சி, வரகனூர், சங்குபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயனடையும் வகையில் இந்ந கால்நடை புதிய மருத்துவமனையை தமிழக அரசு தந்துள்ளது.

கருவூட்டல் 

இந்ந மருந்துவமனையின் மூலம் 1615 மாட்டு இனங்களும், 7ஆயிரத்து 153 செம்மறிஆடுகளும், 6ஆயிரத்து 480 வெள்ளஆடுகளும், 457 நாய்களும், 12 ஆயிரத்து 635 கோழிகளும் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனை மூலம் தினசரி கால்நடைகளுக்கு கருவூட்டல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையாபாண்டியன், கால்நடை மண்டல இனை இயக்குநர் ஜெயகுமார், துனை இயக்குநர் அருணாச்சலக்கனி, உதவி இயக்குநர் எட்வின் ஜேமஸ் ஜெபதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story