கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல நெல்லையில் வைகோ பேட்டி


கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல நெல்லையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 7:17 PM IST)
t-max-icont-min-icon

கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

நெல்லை, 

கேரள வெள்ளபெருக்கு முல்லை பெரியாறு அணை திறப்பு காரணம் அல்ல என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

 ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் 

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செப்டம்பர் 15–ந்தேதி ஈரோட்டில் நடக்கும் ம.தி.மு.க. மாநாட்டுக்கு நிதி அளிக்கும் கூட்டம் ஆகியவை பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங் பேசினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் நிதியை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நிஜாம்(நெல்லை மாநகர்), ராஜேந்திரன்(நெல்லை புறநகர்), செல்வம்(தூத்துக்குடிதெற்கு), ரமேஷ்(தூத்துக்குடி வடக்கு), சண்முகசுந்தரம்(விருதுநகர்), சண்முகசுந்தரம்(விருதுநகர்), செய்தி தொடர்பாளர் மின்னல்முகமதுஅலி, வக்கீல்அணி துணை செயலாளர் சுப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 இதைத்தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

 முக்கொம்பு அணை உடைப்பு 

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளசேதத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழக மக்கள் வழங்கிய நிவாரணத்தை பார்த்து தமிழர்களின் மனித நேயம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார்கள். ம.தி.மு.க. சார்பில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

திருச்சி முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்டதற்கு அணை பராமரிப்பு இல்லாததே காரணமாகும். தமிழக அரசு நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் முறையாக பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் உள்ள மணல்களை கொள்ளையடிப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டும். கேராள மக்கள் மணலை எப்படி பாதுகாக்கிறார்கள். அது போன்று தமிழக மக்களும் மணலை பாதுகாக்க முயற்சி எடுக்கவேண்டும்.

கொள்ளிடத்தில் ரூ.410 கோடியில் அணைக்கட்டப்படும் என்று முதல்–அமைச்சர் அறிவித்து உள்ளார். இது ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோதே அறிவிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக அந்த அணையை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு திட்டங்களை அறிவிக்கிறது ஆனால் அதை செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகிறது.

கருணாநிதி உருவப்படம் 

ஈரோட்டில் செப்டம்பர் 15–ந்தேதி நடைபெறுகின்ற ம.தி.மு.க. மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது ஆனால் கருணாநிதி மறைவு மற்றும் தி.மு.க. கூட்டம் நடைபெறுவதால் அவரால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று என்னிடம் கூறி உள்ளார். அவருக்கு பதிலாக துரைமுருகன் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுகிறது. மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள், வெளிமாநில முன்னாள் முதல்–அமைச்சர்கள் உள்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு ம.தி.மு.க.வினருக்கு உந்துதலை ஏற்படுத்தும், திராவிட இயக்கத்தை மேலும் பலப்படுத்தும்.

கருணாநிதிக்கு நடக்கும் புகழ்அஞ்சலி கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. கருணாநிதிக்கு அளிக்கும் புகழ்அஞ்சலி அரசியல் எல்லை கடந்தது. இது ஆரோக்கியமான அரசியலாகும். அ.தி.மு.க.வினர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்து உதாசினப்படுத்தினார்கள். பின்னர் கோர்ட்டிற்கு சென்று உரிமையை பெற்றனர். இது தமிழக மக்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் அ.தி.மு.கவை அழைக்காமல் இருக்கலாம்.

முல்லை பெரியாறு 

கேரளாவில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகுதான் முல்லை பெரியாறு அணை நிரம்பியது. மற்ற அணைகள் திறக்கப்பட்ட பிறகு தான் இந்த அணை திறக்கப்பட்டது. அதுவும் 1½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. எனவே முல்லை பெரியாறு அணை திறப்பு கேரள வெள்ளபெருக்குக்கு காரணம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story