மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
போரூரில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பூந்தமல்லி,
போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டுப் போவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போன இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் அனைத்து இடங்களிலும் ஒரே நபர்தான் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் போரூர் ஜெய பாரதி நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வெளி இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடினால் அதனை எடுத்து வரும் வழியில் போலீசிடம் சிக்கி கொள்வோம் என்பதாலும், பதுக்கி வைப்பதில் சிரமம் இருக்கும் என்பதாலும் அவர் வசிக்கும் பகுதியிலேயே மோட்டார் சைக்கிள்களை திருடி அதனை அந்த பகுதியிலேயே பதுக்கி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகுமார் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story