ஆட்சியாளர்கள், இனியாவது விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
ஆட்சியாளர்கள், இனியாவது விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை வரவேற்பதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கும்பகோணம் வந்தார்.
அங்கு அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த அதிக அளவில் பொதுமக்கள் வந்தனர். இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இது வாஜ்பாய் மீது உள்ள மரியாதையை உயர்த்தி காட்டியது.
தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் எல்லோரும் ஒற்றுமையுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இது வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரி நீருக்காக அதிக அளவில் கூக்குரல் கொடுத்துள்ளது. சாதாரண கட்டத்தில் அணைகள் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆய்வு செய்து பார்த்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது. வறட்சி காலங்களில் நாம் ஏரி, குளங்களை தூர்வாரி செப்பனிட்டிருக்க வேண்டும்.
இதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய தவறி விட்டார்கள். தற்போது அதை பற்றி குறை சொல்லி எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும். கல்லணை கரிகாலன் கட்டியது. கரிகாலன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே அதற்கு எந்த பாதிப்பும் வராது. நான் அதன் பிறகு கட்டிய அணைகளை பற்றித்தான் கவலைப்படுகிறேன்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஐக்கிய அரபு அமீரகம், ரூ.700 கோடி தருவதாக கூறியது. இந்த நிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதைவிட அதிகமாகவே மத்திய அரசு தர தயாராக உள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான், எந்த மாநிலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டு அதற்காக அந்நிய நாட்டு நிதியை பெற்றால் தேசிய கொள்கைக்கு இழுக்கு என்று கூறி அவ்வாறு கிடைக்கும் நிதிகளுக்கு தடை போட்டார். அந்நிய நாடுகள் அவ்வாறு பணம் தர வேண்டும் என்றால் முறையாக மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று தர வேண்டும். அவ்வாறு கேட்காமல் கொடுக்கும் பட்சத்தில் தனியார் அமைப்புகள் தவறாக பயன்படுத்தி கொள்ள நேரிடும்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி அமைத்து தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். கூட்டணி அமைவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.
தி.மு.க.வில் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை.இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் சதீஷ், நகர தலைவர் சோழராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கும்பகோணம் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது கும்பகோணம் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story