ஓசூர் அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் விவசாயிகள் கவலை
ஓசூர் அருகே விவசாய பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றில் 4 யானைகள் மட்டும் தனியாக பிரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தாலி வனப்பகுதிக்கு சென்றன. அங்கிருந்து நேற்று முன்தினம் அதிகாலை கெலவரப்பள்ளி அணைக்கு சென்ற யானைகள் மாலை வரை அந்த பகுதியிலேயே முகாமிட்டு ஆனந்த குளியல் போட்டன.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினார்கள். இதையடுத்து அந்த யானைகள் நந்திமங்கலத்தை அடுத்த பெருமாண்டப்பள்ளிக்கு சென்றன.
பின்னர் அங்குள்ள மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்புகளில் காட்டு யானைகள் புகுந்தது. இந்த நிலையில் யானைகள் அங்கு இருக்கும் தகவல் அறிந்த சூளகிரி வனச்சரகர் பாபு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யானைகள் நந்திமங்கலம் அருகே சென்றது. அப்போது அங்குள்ள தக்காளி உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து சென்றன. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நந்திமங்கலம் அருகில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story