நாக்பூரில் ‘ஸ்கரப் டைபுஸ்’ காய்ச்சலுக்கு 5 பேர் பலி


நாக்பூரில் ‘ஸ்கரப் டைபுஸ்’ காய்ச்சலுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:31 AM IST (Updated: 26 Aug 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக நாக்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்கரப் டைபுஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

நாக்பூர்,

ஒரியன்டியா ட்சுட்சுகாமுசி எனப்படும் பாக்டீரியா தாக்குதல் காரணமாக பரவும் இந்த காய்ச்சல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதாகும்.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இந்த மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் தீவிர கிசிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story