இன்று ரக்‌ஷா பந்தன்: 197 சிறப்பு பஸ்கள் இயக்கம்


இன்று ரக்‌ஷா பந்தன்: 197 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:41 AM IST (Updated: 26 Aug 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

ரக்‌ஷா பந்தனையொட்டி 197 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என பெஸ்ட் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மும்பை,

ரக்‌ஷா பந்தனையொட்டி இன்று மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்து உள்ளது. 

சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இன்று பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்வார்கள். இதேபோல ஆண்கள் தங்கள் சகோதரிகளுக்கு அன்பளிப்புகளை கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

மும்பையில் ரக்‌ஷா பந்தன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று ராக்கி கட்டி மகிழ்வார்கள்.

இதேபோல பொது மக்களின் வசதிக்காக பெஸ்ட் நிர்வாகம் 197 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.

இந்த பஸ்கள் முக்கியமான பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

மேலும் ரக்‌ஷா பந்தனையொட்டி இன்று மத்திய, மேற்கு ரெயில்வேயில் நடைபெற இருந்த வாராந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று எல்லா வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என மத்திய, மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. 

Next Story