பழனி, திண்டுக்கல், வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி


பழனி, திண்டுக்கல், வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:42 AM IST (Updated: 26 Aug 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

பழனி, திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்ததை அடுத்து, அவருடைய அஸ்தியை பல்வேறு புண்ணிய நதிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று உடுமலைப்பேட்டை வழியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி பா.ஜ.க. அலுவலகத்துக்கு அஸ்தி கொண்டு வரப்பட்டது. அங்கு, பா.ஜ.க. விவசாயிகள் அணி தேசியக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து வரப்பட்டு பழனி பஸ்நிலையம் ரவுண்டானா அருகே பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தி.மு.க. சார்பில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து சத்திரப்பட்டிக்கு வந்த அஸ்திக்கு பா.ஜ.க. கிளை தலைவர் விஜயன், வட்டார பொறுப்பாளர் மருதமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வெள்ளைவிநாயகர் கோவில் அருகே கொண்டு வந்தவுடன் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருமலைபாலாஜி, போஸ், மாவட்ட செயலாளர் தனபாலன், நகர தலைவர் லட்சுமணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், நாகல்நகர் ரவுண்டானா அருகே கொண்டு வரப்பட்ட அஸ்திக்கு இரண்டாவது முறையாக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர்மன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, திண்டுக்கல் தொகுதி செயலாளர் கனகராஜ் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பேகம்பூர், செம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக தேனி கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, வத்தலக்குண்டுவில் பா.ஜ.க. பிரமுகர்கள் முத்துராமலிங்கம், அழகுமணி, டாக்டர் ராஜாமுகமது மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னத்துரை, இந்து முன்னணி நிர்வாகிகள் வேலுச்சாமி, அண்ணாத்துரை உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஸ்தி ரதயாத்திரையுடன், பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன், துணை தலைவர் சுரேந்திரன், ரதயாத்திரை குழு மாநில தலைவர் காந்தி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உடன் சென்றனர்.

Next Story