சட்டத்தை மதிப்பதிலும், கடைபிடிப்பதிலும் மிகவும் உறுதியானவர் வாஜ்பாய் - கவர்னர் கிரண்பெடி புகழாரம்
சட்டத்தை மதிப்பதிலும், கடைபிடிப்பதிலும் மிகவும் உறுதியானவர் வாஜ்பாய் என்று அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியின் போது கவர்னர் கிரண்பெடி புகழ்ந்து பேசினார்.
புதுச்சேரி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியானது கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது. புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செயலாளர் அருள்முருகன் ஆகியோர் அஸ்தியை பெற்றுக்கொண்டு புதுவை வந்தனர். புதுவை பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் புதுவை முழுவதும் 2 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாயின் அஸ்தி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து கடற்கரை சாலை நோக்கி மவுன ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை காந்தி திடலை அடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மேடையில் வாஜ்பாய் அஸ்தி வைக்கப்பட்டது.
பின்னர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகச்சிறந்த கவிஞர். மனிதத்துவத்தை மதிக்கக் கூடிய தலைவர். நான் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய போது, அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அலுவலக ரீதியாக அவருடன் பேசும்போது அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று தெரிவிப்பார். சட்டத்தை மதிப்பதிலும், கடைபிடிப்பதிலும் மிகவும் உறுதியாக இருந்ததை நான் அவரிடம் கண்டேன். சட்டத்தை மதிக்க தெரிந்த தலைவர், ஒருபோதும் சட்டத்தை மீறவோ, அதனை உடைப்பதற்கோ உடன்பட்டவர் அல்ல. அவரை மிக நேர்மையான தலைவராக நான் பார்த்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, டி.பி.ஆர். செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாறன், செல்வகணபதி, சங்கர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சிவக்குமார், ராஜவேலு, பன்னீர்செல்வம், விசுவநாதன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், நேரு, முன்னாள் எம்.பி. கண்ணன், பா.ஜ.க. துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் நாரா கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ராஷ்டிரிய ஜனதா தள மாநில தலைவர் சஞ்சிவி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து காந்திதிடலில் இருந்து வாஜ்பாயின் அஸ்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டர். பின்னர் தலைமை செயலகம் எதிரே மதியம் 12.20 மணியளவில் கடலில் கரைக்கப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ள வில்லை. அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

Related Tags :
Next Story