காதலர் உங்களுக்கு பொருத்தமானவரா? இதை வைத்து பரிசோதித்துப் பாருங்கள்.


காதலர் உங்களுக்கு பொருத்தமானவரா? இதை வைத்து பரிசோதித்துப் பாருங்கள்.
x

நீங்கள் ஆண் நண்பருடன் பழகி வருகிறீர்களா? அவர் காதலைச் சொல்லியிருக்கிறாரா? அல்லது காதலிப்பதுபோல பேசுகிறாரா? இல்லை உங்களுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறதா?

நீங்கள் ஆண் நண்பருடன் பழகி வருகிறீர்களா? அவர் காதலைச் சொல்லியிருக்கிறாரா? அல்லது காதலிப்பதுபோல பேசுகிறாரா? இல்லை உங்களுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறதா? உங்கள் இருவருக்குள் பொருத்தம் எப்படி? என்பதை எல்லாம் இந்த பரிசோதனையின் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டு நீங்கள் ஜோடி சேருவதைப் பற்றி யோசிக்கலாம்...

1. அவருடைய வயது என்ன? உங்களுக்குள் வயது வித்தியாசம் எவ்வளவு?

அ. நாங்கள் ஒரே வயதுடையவர்கள்

ஆ. அவர் 5 வயது மூத்தவர்

இ. அவர் 35 வயதுக்கு மேற்பட்டவர்

ஈ. வயது தெரியாது

2. யார் அதிகமாக போனில் அழைப்பது, அதிகமாக பேசுவது?

அ. அவர்தான்

ஆ. நிச்சயமாக நான்தான்

இ. இருவருமே

ஈ. நாங்கள் அதிகமாக பேசுவதில்லை.

3. அவர் வெளியே போகும்போது...

அ. வழக்கமாக என்னையும் தன்னோடு அழைப்பார்

ஆ. அழைத்தால் சந்தோஷப்படுவேன்

இ. கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்

ஈ. எங்கு செல்கிறார் என்பதை சொல்லமாட்டார்

4. உங்கள் மீது எவ்வளவு அக்கறை காட்டுவதாக நினைக்கிறீர்கள்?

அ. அவரது அக்கறையால் நெகிழ்ந்து போவேன்

ஆ. சில நேரங்களில் மட்டும் அக்கறை காட்டுவார்

இ. என்மீது அவருக்கு அக்கறையே இல்லை

ஈ. அக்கறை காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

5. பிறந்தநாள், சந்தித்த முதல்நாளை நினைவில் வைத்திருக்கிறாரா?

அ. ஆம், ஞாபகசக்தியால் அசத்துவார்

ஆ. யோசித்துச் சொல்வார்

இ. பிறந்தநாள் தெரியாது

ஈ. நாங்கள் அவ்வளவு நெருங்கவில்லை

6. வெளியே சென்றால் யார் செலவு செய்வது?

அ. அவர்தான் செய்வார்

ஆ. நான்தான் கொடுப்பேன்

இ. மாறி மாறி கொடுப்போம்

ஈ. வெளியே சென்றதில்லை

7. அடிக்கடி வெளியே செல்கிறீர்களா?

அ. ஆமாம்

ஆ. தினசரி சந்திப்போம், எப்போதாவது வெளியே போவோம்

இ. சந்திக்க செல்ல மாட்டேன்

ஈ. அழைக்க மாட்டார்

8. நீங்கள் அவருடன் இருக்கும்போது என்ன செய்வார்?

அ. கொஞ்சிப் பேசுவார்

ஆ. இயல்பாக இருப்பார், பேசுவார்

இ. செக்சியாக பேசுவார்

ஈ. தொட்டுத் தொட்டு பேசுவார்

9. உங்களுடன் இருக்கும்போது வேறு பெண்களை பார்ப்பாரா?

அ. உறுதியாக தெரியவில்லை

ஆ. இல்லை, எனக்காகத்தான் வெளியே வருவார்

இ. பார்ப்பார், தவறாக இல்லை.

ஈ. எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது

10. சந்திப்பின்போது அலுவலகம் பற்றி பேசுவாரா?

அ. சில விஷயங்களை பகிர்ந்து கொள்வார்

ஆ. தினசரி நடப்பதை பகிர்ந்து கொள்வார்

இ. கேட்டால் மட்டும் சொல்வார்

ஈ. அதுபற்றி பேச மாட்டோம்

11. அவர் உங்களை கைவிட்டது போன்ற நினைப்பு வந்ததுண்டா?

அ. இல்லை. எங்களுக்குள் இணக்கம் அதிகம்

ஆ. கைவிடமாட்டார்

இ. சிலவேளைகளில் அப்படித் தோன்றும்

ஈ. அடிக்கடி அந்த நினைப்பு வருகிறது

12. உங்களுக்கு இடையேயான உறவு என்ன?

அ. சிறந்த நண்பர்கள்

ஆ. ஒன்றாக படித்தோம் - பணிபுரிகிறோம்

இ. அருகில் வசிப்பவர், தெரிந்தவர்

ஈ. அவராக வந்து பேசியவர்

13. அதிகமாக விவாதம் செய்வீர்களா? மோதல் ஏற்படுமா?

அ. பல விஷயங்களையும் விவாதிப்போம், மோதல் இல்லை.

ஆ. எங்களுக்கு தனித்தனி கருத்து இருக்கிறது

இ. நாங்கள் அமைதிப் பேர்வழி, எதையும் விவாதிக்க மாட்டோம்

ஈ. அடிக்கடி மோதல் வரும்

14. அவர் உங்களுக்கு வேண்டுமா?

அ. நிச்சயம், அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

ஆ. அவர் கிடைத்தால் சந்தோஷம்

இ. பழக்கம் உள்ளது. அவர்தான் என்னை நேசிக்கிறார்

ஈ. அவரை ஈர்க்க முயற்சிக்கிறேன்

15. எவ்வளவு இடைவெளியில் சந்திப்பீர்கள்?

அ. அடிக்கடி சந்திக்கிறோம், நேரம்காலம் கணக்கில்லை.

ஆ. மாதம் ஓரிருமுறை

இ. ேதவைப்பட்டால் சந்திப்போம்

ஈ. பேசுவோம், சந்திப்புகள் இல்லை



Next Story