பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பயிற்சி
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான லடாக் பகுதியிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான லடாக் பகுதியிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் புத்த துறவிகள் களம் இறங்கி இருக்கிறார்கள். குங்க் பூ பயிற்சி பெற்ற புத்த துறவிகள் மூலம் அங்குள்ள பெண்களுக்கு சுய பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 12 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
‘‘பல ஆண்டுகளாகவே லடாக் நகரில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை கண்காணித்து வருகிறோம். அங்கு வசிக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. கொடூரமான குற்ற செயல்கள், பாலியல் வன்முறைகள், ஈவ் டீசிங் போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கான அதிகாரம் மற்றும் சுய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த பயிற்சி துணை நிற்கும்’’ என்கிறார், பயிற்சி யாளர் ரிஜின் அங்மோ.
14 புத்த துறவிகள் குங்க் பூ பயிற்சியை வழங்கி வருகிறார்கள். முதல்கட்டமாக 6 நாட்கள் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.
குங்க் பூ பயிற்சி தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்வதாகவும், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதும் மாணவிகளின் கருத்தாக இருக்கிறது.
இதுபற்றி மாணவி ஒருவர் கூறுகையில், ‘‘இன்றைய காலகட்டத்தில் குங்க் பூ கற்பது அவசியமானது. குங்க் பூவை கற்பதால் என் தன்னம்பிக்கைத் தன்மை அதிகரித்திருக்கிறது. சமூக துஷ்பிரயோகங்களை சமாளிக்க அதன் மூலம் நிறைய நுட்பங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்தால் அவர்களால் தங்களை தற்காத்து கொள்வது சவாலான காரியமாகிவிடும். குங்க் பூ கற்றுக்கொள்வது தன்னம்பிக்கையை மேம்படுத்தும். எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால் குங்க் பூவைக் கற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்தேன்’’ என்கிறார்.
Related Tags :
Next Story