ஆற்றில் பெண் பிணம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலம் 2 பேர் கைது
கீழ்வேளூர் அருகே ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்து வந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக அவருடைய கணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடியில் உள்ள பாண்டவையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வலிவலம் போலீசார், அங்கு சென்று பிணத்தை மீட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி விசாரணையை துரிதப்படுத்தினர்.
அந்த பெண்ணின் உடல் நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் கிள்ளுக்குடியை அடுத்த கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குஞ்சுபிள்ளை (வயது57) என்பவருடைய மனைவி மாரியம்மாள் (42) என்பது தெரிய வந்தது.
அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி மாரியம்மாளை, குஞ்சுபிள்ளை கழுத்தை நெரித்துக்கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் குஞ்சுபிள்ளையையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கடலாகுடியை சேர்ந்த தினேஷ் குமார் (19) என்பவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
மாரியம்மாளுக்கு பல்வேறு நபர்களுடன் கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் அவர் இரவு நேரத்தில் தாமதமாக வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை குஞ்சுபிள்ளை கண்டித்தார்.
இருப்பினும் மாரியம்மாள் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சுபிள்ளை, தினேஷ்குமாருடன் சேர்ந்து மாரியம்மாளின் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்து விட்டு, உடலை பாண்டவையாற்றில் வீசி சென்றது தெரியவந்தது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story