தூத்துக்குடியில் ‘கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி’


தூத்துக்குடியில் ‘கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி’
x
தினத்தந்தி 27 Aug 2018 3:00 AM IST (Updated: 27 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ‘கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி’யில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலையில் விளையாடி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட போலீஸ் துறை சார்பில் ‘கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி‘ நேற்று காலை தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே நடந்தது. இதற்காக ரோச் பூங்காவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தெற்கு பீச் ரோட்டில் காலை 6 மணி முதல் 8 மணி வரை கார், உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முகாம் அலுவலகங்களில் இருந்து சைக்கிளில் ரோச் பூங்காவுக்கு வந்தனர். அங்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. ஸ்கேட்டிங், கைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன. இதில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். மாநகராட்சி சார்பில் 50 சைக்கிள்கள் வைக்கப்பட்டு இருந்தன. இளைஞர்கள் இலவசமாக அந்த பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி’ காலை 6 மணி முதல் 8 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக் கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதுதவிர சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story