மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை தினேஷ் குண்டுராவ் பேட்டி
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பல்லாரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. கூட்டணி ஆட்சி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களை திசை திருப்பும் வகையில் உள்ளன. மோடி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, நாட்டில் அமைதி நிலவியது. அமைதியான நாட்டை கட்டமைக்க காங்கிரஸ் பாடுபட்டது.
மோடி பிரதமரான பிறகு ராணுவ வீரர்கள், போலீசார் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு மரணம் அடைகிறார்கள். ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பை அவர் இன்னும் உருவாக்கவில்லை. மதவாத சக்திகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Related Tags :
Next Story