மும்பையில் ரக்ஷா பந்தன் உற்சாக கொண்டாட்டம்
மும்பையில் ரக்ஷா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெண்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.
மும்பை,
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மற்ற நகரங்களை காட்டிலும் மும்பையில் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் பின்னர் ராக்கி கயிறை கட்டி மகிழ்ந்தனர். இதேபோல ஆண்களும் தங்களது சகோதரிகளுக்கு அன்பளிப்புகளை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
மாநில மந்திரி பங்கஜா முண்டே உள்ளிட்ட பெண் அரசியல் தலைவர்களும், நடிகைகளும் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். பல இடங்களில் முஸ்லிம் பெண்களும் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினார்கள்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை யொட்டி நேற்று மும்பை நகரமே விழா கோலம் பூண்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெறிச்சோடி காணப்படும் மும்பை சாலைகள் நேற்று மக்கள் கூட்டத்துடன் காணப்பட்டது. ராக்கி கட்ட பெண்கள் தங்கள் சகோதரர்களின் வீடுகளுக்கு செல்வார்கள் என்பதால் நேற்று பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல நேற்று மும்பையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரக்ஷா பந்தனையொட்டி நேற்று சிறப்பு பெஸ்ட் பஸ்கள், ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story