கூடலூரில் பிளஸ்–2 மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை


கூடலூரில் பிளஸ்–2 மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 Aug 2018 5:38 AM IST (Updated: 27 Aug 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பிளஸ்–2 மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கூடலூர்,

கூடலூர் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் அபினேஷ் (வயது 16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் அவர் பூச்சி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவருடைய உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடனே தரும்படி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story