சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் ஏறி புகுந்த பாம்பால் பரபரப்பு
சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் ஏறி புகுந்த பாம்பால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45). இவர் தனது மோட்டார்சைக்கிளில் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். மோட்டார்சைக்கிளை கடை முன்பு நிறுத்திவிட்டு டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஊர்ந்து வந்த பாம்பு அவரது மோட்டார்சைக்கிளின் என்ஜினின் புகுந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இதுபற்றி நடராஜிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து பாம்பை வெளியே செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். மோட்டார்சைக்கிளை நிறுத்திக்கொண்டே அழுத்தமாக ஸ்டார்ட் செய்தார். இதில் என்ஜினின் சூடு தாங்காமல் பாம்பு உள்ளே இருந்து வெளியே வந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் கம்பால் அடித்து அந்த பாம்பை கொன்றார்கள். அந்த பாம்பு சுமார் 3½ நீளமுடைய பாம்பு என்று தெரியவந்துள்ளது.
மோட்டார்சைக்கிளில் ஏறி புகுந்த பாம்பால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.