நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பூமிக்கு அடியில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்பதால் மக்கள் அச்சம்
மடிகேரி தாலுகா கரிக்கே, மக்கந்தூர் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பூமிக்கு அடியில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதிகளில் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
குடகு,
குடகு மாவட்டத்தை கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை புரட்டிப்போட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக குடகு மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகள், உடைமைகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். முகாம்களில் தவித்து வரும் மக்களுக்கு அரசு, தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் மடிகேரி தாலுகாவில் உள்ள கரிக்கே மற்றும் மக்கந்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். குறிப்பிட்ட 2 இடங்களில் மட்டும் இந்த சத்தம் கேட்டு வருகிறது. இதனால் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
ஏற்கனவே கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்கள் எங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தோம். தற்போது பூமிக்கு அடியில் சத்தம் கேட்பதால் நாங்கள் பீதியில் உள்ளோம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புவியியல் துறை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மக்கள் அச்சம் அடைய தேவைஇல்லை என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவு காரணமாக ஏராளமான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துவிட்டது. பல பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுபோல் சாலைகளிலும் மண்அரிப்பு, விரிசல் காணப்படுகின்றன. இதனால் மடிகேரி- குசால் நகர், மடிகேரி-சுண்டிகொப்பா உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மடிகேரி தாலுகாவில் உள்ள கரிக்கே மற்றும் மக்கந்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். குறிப்பிட்ட 2 இடங்களில் மட்டும் இந்த சத்தம் கேட்டு வருகிறது. இதனால் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
ஏற்கனவே கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்கள் எங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தோம். தற்போது பூமிக்கு அடியில் சத்தம் கேட்பதால் நாங்கள் பீதியில் உள்ளோம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புவியியல் துறை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மக்கள் அச்சம் அடைய தேவைஇல்லை என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story