கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2018 3:15 AM IST (Updated: 28 Aug 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 


கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இனாம் மணியாச்சி பஞ்சாயத்து ஆலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் கோமதி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராம்கி, மாவட்ட செயலாளர் நாராயணன், ஒன்றிய பொதுச்செயலாளர் குருராஜ், தொகுதி பொறுப்பாளர் பாலு, அமைப்புசாரா அணி தலைவர் லட்சுமணன் மற்றும் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம், யூனியன் ஆணையாளர் கிரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story