2020–ம் ஆண்டில் உலகில் 3–வது பெரிய வாகன சந்தையாக இந்தியா விளங்கும்: அண்ணாபல்கலைக்கழக இயக்குனர் பேச்சு


2020–ம் ஆண்டில் உலகில் 3–வது பெரிய வாகன சந்தையாக இந்தியா விளங்கும்: அண்ணாபல்கலைக்கழக இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

2020–ம் ஆண்டில் உலகில் 3–வது பெரியவாகன சந்தையாக இந்தியா விளங்கும் என்று கருத்தரங்கில் அண்ணாபல்கலைக்கழக இயக்குனர் கூறினார்.

கிணத்துக்கடவு,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.யு.ஐ.சி.சார்பில் வேலை வாய்ப்புகள் மற்றும் மெக்கானிக்கல் துறையில் பெண்களின பங்களிப்பு குறித்து அரசு மற்றும் அரசுஉதவி பெரும்பள்ளியில் படித்துவரும் பிளஸ் –1, பிளஸ்–2 மாணவிகளுக்கான கருத்தரங்கு கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர்பொறியியல் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை அண்ணாபல்கலைக்கழக சி.யு.ஐ.சிஇயக்குனர் தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:– திறமை வாய்ந்த மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை வளர்த்தல் என்பதோடு அதிகரித்து வரும் தேவை காரணமாக உலகில் முதல் ஐந்து வாகன உற்பத்தியாளர்களுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 23.6 சதவீதம் ஆட்டோமொபைல் துறை உள்ளது.

வாகனதுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தருகிறது.2020–ம் ஆண்டில் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாகவும், மூன்றாவது பெரிய வாகன சந்தையாகவும் இந்தியா விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலக அளவில் நான்காவது பெரிய கார் தயாரிப்பாளர் இந்தியாவில் 30.5 மில்லியன் வாகனங்களை தயாரித்து வருகிறார். ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறை மேம்பட, 100 சதவீதம், எப்.டி.ஐ. உள்ளது. இதன் மூலம் பன்னாட்டு கார் தயாரிப்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். மேல்நிலை மற்றும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் மையம் – தொழில் கூட்டுறவு, அண்ணா பல்கலைகழகம் என்ற அடிப்படையில் உணர்வுதிறன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கல்வி அதிகாரிஅய்யண்ணன்,ரெனால்ட் நிஸான் நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம், நிதித்துறையின் மேலாளர்பிரசன்னாநாகராஜன், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி முதல்வர் சுதாமோகன்ராம் உள்பட பலர் பேசினார்கள்.இதில் கோவைமாவட்டத்தில் உள்ள 60 அரசு மற்றும் உதவிபெறும்பள்ளிகளில்இருந்து ஆயிரத்து 256 மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில் அண்ணாபல்கலைகழக சி.யு.ஐ.சி. துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வன் நன்றிகூறினார்.


Next Story