செப்டம்பர் 12-ந் தேதி இயக்கப்படுகிறது எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இன்று முன்பதிவு நடக்கிறது
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரெயில் செப்டம்பர் 12-ந் தேதி இரவு 10.15 மணிக்கு இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்:82609) வருகிற செப்டம்பர் 12-ந் தேதி இரவு 10.15 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நெல்லை சந்திப்பை மறுநாள் (13-ந் தேதி) காலை 10.30 மணிக்கு சென்றடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் அக்டோபர் 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்:82610) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் (3-ந் தேதி) அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இதே போன்று செப்டம்பர் 14-ந் தேதி சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்துக்கும் (வ.எண்:06005), மறுமார்க்கத்தில் 30-ந் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கும் (வ.எண்:06006) சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story