தி.மு.க. பிரமுகர் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா? உதவி கலெக்டர் விசாரணை
மயிலாடுதுறை அருகே தி.மு.க. பிரமுகரின் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.என்.சேகர். இவர் மயிலாடுதுறை ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆவார். இவருடைய மகன் சவுரிராஜன். இவருக்கும், கடலூர் மாவட்டம் திட்டக்குடி- பெண்ணாடம் மாந்தோப்பு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகள் ஆர்த்தி (வயது29) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கணவரின் வீட்டில் வசித்து வந்த ஆர்த்தி நேற்று வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சவுரிராஜன் மற்றும் குடும்பத்தினர், ஆர்த்தியின் தந்தை கலியபெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தனது உறவினர்களுடன் கோவங்குடிக்கு சென்ற கலியபெருமாள், தனது மகள் ஆர்த்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் ஆர்த்தியின் உடலை, பிரேத பரிசோதனை செய்வதற்கு சவுரிராஜனின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டார் என்றும், அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசில் கலியபெருமாள் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆர்த்திக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story