தூய்மை பாரத இயக்க கணக்கெடுக்கும் பணி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்- ஊரகம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் மாவட்ட பகுதிகளில் தனிநபர் கழிப்பறைகள், திடக்கழிவு, கழிவு நீர் மேலாண்மைகான ஏற்பாடுகள் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் பொது சுகாதாரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கு பெறுவதற்கான SSG 18 என்ற app ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த ஆப்பை பதிவு இறக்கம் செய்து உங்கள் கிராமத்தின் சுகாதார நிலை எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது? என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு தொலைபேசியில் ஒரு முறை மட்டும் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய முடியும். இந்த கணக்கெடுப்பு வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story