பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து அரசு பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி


பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து அரசு பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து அரசு பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயன்றதால் ஒரத்தநாடு போக்குவரத்துக்கழக பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை அண்ணா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது40). இவர் கும்பகோணம் போக்குவரத்துக்கழக ஒரத்தநாடு பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். பணியில் குறைபாடு இருப்பதாக கூறி இவரை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 2 நாட்கள் பணியிடை நீக்கம் செய்தனர்.

பணியிடை நீக்க காலம் முடிவடைந்த நிலையில் நேற்று பணியில் சேர்வதற்காக ஒரத்தநாடு பணிமனை அலுவலகத்துக்கு சென்ற மாரியப்பனிடம், அவரை பட்டுக்கோட்டை பணிமனைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து ஒரத்தநாடு பணிமனை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு இருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாரியப்பனுக்கு ஆதரவாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டக்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஒரத்தநாடு போக்குவரத்துக்கழக பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story